திமுகவுக்கு தேர்தல் நிதி கொடுத்தாரா அதிமுக பிரமுகர்?

திமுகவுக்கு தேர்தல் நிதி கொடுத்தாரா அதிமுக பிரமுகர்?
dmk
முன்னாள் எம்.எல்.ஏவும் அதிமுகவின் குமரி மாவட்ட பொருளாளருமான ராஜன், திமுகவுக்கு தேர்தல் நிதி கொடுத்ததாக ஒரு ரசீது இணையதளங்களில் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர் மீது அதிமுக தலைமை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கும் நிலையில், தன்னுடைய வளர்ச்சியை கண்டு பொறுக்க முடியாத சில விஷமிகள் தன்னுடைய பெயரில் நிதி கொடுத்துள்ளதாக ராஜன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில் நகர திமுக செயலளாராக இருந்து அதன்பின்னர் கடந்த 2006-ம் ஆண்டு நாகர்கோவில் சட்டமன்ற திமுக எம்.எல்.ஏவாக வெற்றிப் பெற்ற ராஜன், சட்டமன்றத்தில் “ஜெயலலிதா” முன்பே அவருடைய பெயரை சொல்லி சலசலப்பை உருவாக்கியவர். தீவிர அழகிரி ஆதரவாளராக இருந்த ராஜனுக்கு,  கடந்த 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுகவில் சீட் கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த ராஜன், தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வுக்கு தாவினார்.

தற்போது அ.தி.மு.க.வில் மாவட்ட துணைச் செயலாளர், மாவட்ட பொருளாளர் ஆகிய பதவிகளில் இருந்து வரும் ராஜனை மீண்டும் திமுகவில் இழுக்க முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. ராஜனும் தனக்கு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சீட் தருவதாக இருந்தால், தி.மு.க.வுக்கு வரத் தயார் என தனக்கு நெருக்கமான தி.மு.க. வட்டாரங்களிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ராஜன் பெயரில் திமுக தலைமைக்கு ரூ.10,000 தேர்தல் நிதியாக வழங்கப்பட்டு அதற்கான ரசீதும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ராஜனின் தரப்பில் இது தனது அரசியல் எதிரிகளின் சதி என்றும் திமுகவுக்கு அவர் நிதி கொடுக்கவில்லை என்றும் மறுக்கப்பட்டுள்ளது.

Chennai Today News: Did ADMK VIP give election donation to DMK?

Leave a Reply