‘கத்தி’ பிரச்சனை குறித்து அஜீத்திடம் முருகதாஸ் கூறியது என்ன? திடுக்கிடும் தகவல்

ajith and murugadossசமீபத்தில் கத்தி படப்பிடிப்பின்பொது திடீரென உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஏ.ஆர்.முருகதாஸை அஜீத், விஜய், சூர்யா ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று சந்தித்து நலம் விசாரித்ததாக செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் மூவரும் ஒரே நேரத்தில் மருத்துவமனைக்கு செல்லவில்லை என்றும், தனித்தனியாக வெவ்வேறு நேரங்களில் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது, சூர்யா, மற்றும் அஜீத்திடம் ஏ.ஆர்.முருகதாஸ் விஜய் குறித்து சில விஷயங்களை மனம்விட்டு பேசியதாக கூறப்படுகிறது.

‘கத்தி’ படத்தின் தயாரிப்பாளர் பிரச்சனை தன்னால் வந்தது என்று விஜய் தவறாக புரிந்து கொண்டுள்ளதாகவும், சமீபகாலமாக விஜய் தன்னிடம் சரியாக பேசவில்லை என்று கூறியதாகவும் ஒருசில இணையதளங்களில் செய்திகள் வெளிவந்தன. மேலும் விஜய் படத்தில் தான் வசமாக சிக்கிக்கொண்டதாகவும் அதில் இருந்து எப்படி மீண்டு வருவது என தெரியாமல் குழப்பதில் இருப்பதாக கூறியதாகவும் செய்திகள் வெளிவந்தன. இந்த செய்திகள் குறித்து முருகதாஸ் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. தற்போது முருகதாஸ் பூரண ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை ஒரு முக்கிய ஆங்கில பத்திரிகையில் வெளிவந்துள்ள ஒரு செய்தியில் முருகதாஸ் மருத்துவமனையில் இருந்தபோது அஜீத் நேரில் போய் சந்திக்கவே இல்லை என்றும், விஜய் மற்றும் சூர்யா மட்டுமே சென்றனர் என்றும், அஜீத், ‘முருகதாஸ் பூரண நலம்பெற எஸ்.எம்.எஸ் மட்டும் அனுப்பியதாகவும் கூறுகிறது. ஒருசில ஊடகங்கள் கற்பனையாக செய்தி வெளியிட்டு வருவதாகவும், இதனால் ரசிகர்கள் குழப்பமடைய வேண்டாம் என்றும் முருகதாஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply