டீசல் கார்கள் தடை எதிரொலி: டெல்லியில் டாக்ஸி டிரைவர்கள் போராட்டம்

டீசல் கார்கள் தடை எதிரொலி: டெல்லியில் டாக்ஸி டிரைவர்கள் போராட்டம்

carsதலைநகர் டெல்லியில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்கள் இயங்கி வரும் நிலையில் 27 ஆயிரம் கார்கள் டீசல் மூலமாக இயங்குகின்றன. இவற்றினால் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகம் ஏற்படுவதன் காரணமாக இந்த கார்களை கியாஸ் மூலமாக இயக்க வேண்டும் என்றும், டீசல் கார்களுக்கு மே 1ஆம்தேதி முதல் தடை விதிக்கப்படுவதாகவும் டெல்லி அரசு உத்தரவிட்டது.

இதனை எதிர்த்தும், காலஅவகாசத்தை நீடிக்க வலியுறுத்தியும் கார் உரிமையாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு நேற்று முன்தினம் தள்ளுபடியான நிலையில் இன்று பல இடங்களில் டீசல் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், டெல்லியில் டீசல் கார்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து டாக்ஸி டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால் புதுடெல்லியை சுற்றிலும் பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரில்சல் ஏற்பட்டுள்ளது.

நொய்டா, கார்கான் உள்ளிட்ட டெல்லியின் எல்லைப் பகுதிகள் முடங்கியுள்ளது. டாக்ஸி டிரைவர்கள் முதலில் மேற்கு டெல்லியின் ராஜோக்ரி பகுதியினை முடக்கினர். இதனால் தாவ்லா- கார்கன் சாலை பாதிக்கப்பட்டது.

இதேபோல், ஜந்தர் மந்தர் பகுதியிலும் சுப்ரீம் கோர்ட் உத்தரவை எதிர்த்து டாக்ஸி டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தடையை நீக்க வேண்டும் என்று அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

Leave a Reply