ரயில் தண்டவாளத்தில் சமையல் செய்து போராட்டம் நடத்தும் விவசாயிகள்

ரயில் தண்டவாளத்தில் சமையல் செய்து போராட்டம் நடத்தும் விவசாயிகள்

rail-protestகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி இன்று தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டத்தை எதிர்க்கட்சிகளும், விவசாயிகள் சங்கமும் இணைந்து நடத்தி வருவதால் பல இடங்களில் ரயில் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது.

இந்நிலையில் தஞ்சை அருகே அய்யனாபுரம் என்ற பகுதியில் திருச்சி-நாகூர் ரயிலை மறித்த விவசாயிகள் ரயில் தண்டவாளத்தில் சமையல் செய்து தங்களது எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள்து. மேலும் தஞ்சையில் கம்பரசன்கோட்டையில் தண்டவாளத்தில் குடில் அமைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால் அப்பகுதி வழியாக செல்லும் ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே இன்று காலை தொடங்கிய ரயில் மறியல் போராட்டம் 48 மணி நேரம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ரயில் தண்டவாளத்தில் போராட்டம் செய்பவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு, திருமாவளவன் போன்ற தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply