அப்பப்பா! இணையத்தில் இத்தனை வகைகளா? – தெரிந்து கொள்ளுங்கள்.
இன்று இணையம் இல்லாமல் எந்தவேலையும் முடிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாக ஆகிவிட்டது. இருந்தும் இந்த இணையம் பற்றிய சில அடிப்படைகளைத் தெரிந்து கொள்ளாமல் வெகு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் அவர்கள் தெரிந்து கொள்வதற்காக இணை யத்தில் எத்தனை வகைகள் இருக்கி றது என்பதைப் பார்ப்போம்.
.com
இது வணிக நிறுவனங்களைக் குறிக்கும். ஆனாலும் தனி நபர்கள் கூட இதனைப் பெற்றுள்ளனர்.
.net
நெட் ஒர்க் சேவையாளர்களை குறிப்பது. ஆனாலும் பிற நிறுவனங்களும் இதனைப் பெற்றுள்ளன.…
.gov
அரசுத் துறைகளுக்கானது. முதலில் அனைத்து நாட்டு அரசுத்துறைகளும் பயன்படுத்திக்கொண்டன. இப்பொழுது அமெரிக்க அரசு மட்டுமே பயன்படுதலாம்.
.edu
கல்வி நிறுவனங்களுக்கானது (பள்ளி கள் அல்ல).
.mil
அமெரிக்க அரசின் இரானுவத்துறை மட்டுமே பயன்படுத்தலாம்.
.int
இருநாட்டு அரசாங்கங்களுக்கு இடை யே ஏற்படும் உடன்படிக்கைகளின் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ள பதிவு பெற்ற அமைப்புக்கள் மட்டுமே இதனை பயன்படுத்தலாம்.
.biz
வணிக நிறுவனங்களுக்கு உரியது.
.info
தகவல்மையங்களுக்கு உரியது.
.name
தனி நபர்களின் இணையத்தளங்களுக்கு உரியது.
.pro
தொழில் துறை வல்லுனர்களுக்கு உரியது.
.aero
வான் போக்குவரத்துத் துறையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே பயன்படுதிக்கொள்ள முடியும்.
.coop
கூட்டுறவு அமைப்பிற்கு உரியது.
.meseum
அருங்காட்சியகங்களுக்குரியது. அருங் காட்சியகங்கள் மட்டுமே இதனை பயன் படுத்திக்கொளள முடியும்.