கும்பலாக யோகா செய்வது உடலுக்கு நல்லதல்ல! திக்விஜய் சிங்

கும்பலாக யோகா செய்வது உடலுக்கு நல்லதல்ல! திக்விஜய் சிங்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் தேதி ‘உலக யோகா தினம்’ கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நேற்று பாரத பிரதமர் மோடி உள்பட ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கானோர் யோகா செய்தனர். இந்த நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் திக்விஜய் சிங் கிண்டல் செய்யும் வகையில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியபோது, ‘மாஸ் யோகா என்று கூறப்படும் கும்பலாக யோகா செய்வது, மருத்துவ முகாம் அமைத்து யாரையும் பரிசோதனை செய்யாமல், ஒருவருக்கு அந்த மருந்து சேருமா சேராதா என்று கூடத் தெரியாமல் ஒரே வகையான மருந்து மாத்திரைகளைக் கொடுப்பது போன்றது என்று கிண்டல்டித்துள்ளார். யோகாசனங்கள் ஒவ்வொரு தனிமனிதனின் உடல்நிலையையும் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு செய்ய வேண்டியது என்றும் இப்படி கும்பலாக யோகா செய்வது உடலுக்கு நல்லதல்ல என்றும் இதைத்தான் நான் நீண்ட காலமாக சொல்லி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தான் ஒரு மருத்துவர் மற்றும் யோகா பயிற்சியாளரிடம் உடலை பரிசோதனை செய்துகொண்டு, எனக்கு ஏற்ற ஆசனங்கள், தியானம், பிராணயாமம் ஆகியவற்றை செய்து வருவதாகவும், அதனால்தான் மிகவும் நலமாக உணர்வதாகவும் தெரிவித்தார். இதனால்தான் 40 ஆண்டுகளாக நான் யோகா செய்துவந்தாலும், மோடி, பாபா ராம்தேவ் போன்றவர்களின் கும்பலாக யோகா செய்யும் முறையை எதிர்ப்பதாகவும் திக்விஜய் சிங் கூறினார்

Leave a Reply