சென்சார்கள் மூலம் இயங்கக்கூடிய கார்களுக்கான தயாரிப்பில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டு வரும் நிலையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் முற்றிலும் தானியங்கி முறையில் செயல்படும் கார்களை உருவாக்கி வருகிறது.
இந்த காருக்குள் வசதியான இருக்கைகள் மட்டுந்தான் இருக்கும். காரின் இடைஞ்சலான எந்த பாகங்களும் கிடையாது.
கண்ணுக்குத் தெரியாத கேமரா, சென்சார்கள் மூலம் கார் இயங்கும். டிரைவர் கிடையாது. பிரேக் கிடையாது. கதவு திறப்பது முதல் வாகன இயக்கத்தின் அனைத்து செயல்களும் சென்சார்தான்.
வைஃபை வசதி உள்பட நவீன வசதிகள் இதில் இருக்கிறது. நடுவில் சின்னதாக டீப்பாய் போன்ற வடிவமைப்பும் உள்ளது.
அந்த அளவுக்கு ஸ்மூத்தான காராக வடிவமைத்துள்ளது பென்ஸ்.