டிஜிட்டல் கரன்சி அறிமுகமாகும் தேதி அறிவிப்பு: ரிசர்வ் வங்கி
இந்தியாவில் டிஜிட்டல் கரன்சி விரைவில் அறிமுகமாக இருப்பதாக ஏற்கனவே மத்திய அரசு தெரிவித்திருந்தது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் டிஜிட்டல் கரன்சி அறிமுகமாக இருப்பதாகவும் சில்லறை பரிவர்த்தனைக்கு இந்த டிஜிட்டல் ரூபாயை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த அறிவிப்பின் மூலம் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய், இருபது ரூபாய், ஐம்பது ரூபாய், நூறு ரூபாய், 500 ரூபாய், 2000 ரூபாய் என டிஜிட்டல் கரன்சிகள் புழக்கத்திற்கு வர உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது