ஜெயலலிதா நடித்த சூரியகாந்தி. செப்.16-ல் டிஜிட்டலில் ரிலீஸ்
பழைய திரைப்படங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டி ரீரிலீஸ் செய்யப்பட்டு வரும் நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா நடித்த சூரியகாந்தி திரைப்படமும் தற்போது டிஜிட்டலில் ரிலீஸ் ஆக தயாராக உள்ளது.
கடந்த 1973ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தின் டிஜிட்டல் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது டிஜிட்டல் பணிகள் முற்றிலும் முடிவடைந்ததால் வரும் 16ஆம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த பத்திரிகை விளம்பரமும் இன்று வெளிவந்துள்ளது.
ஏற்கனவே டிஜிட்டலில் உருவான ‘கர்ணன்’, ‘சிவகாமியின் செல்வன்’, உள்பட பல படங்கள் நல்ல வெற்றிருந்தாலும் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு திரைப்படம் டிஜிட்டலில் வெளியாவது இதுவே முதல்முறை
முக்தா சீனுவாசன் இயக்கிய இந்த படத்தில் முத்துராமன், ஜெயலலிதா, சோ, மனோரமா, மேஜர் சுந்தர்ராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த ‘பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா செளக்கியமா? என்ற பாடல் உள்பட அனைத்து பாடல்களும் சிறப்பான பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.