ஒரே நாளில் 2 இஸ்லாமியர்களின் இறுதிச்சடங்கு. திக்விஜய் சிங் கூறிய சர்ச்சை கருத்தால் பரபரப்பு

ஒரே நாளில் 2 இஸ்லாமியர்களின் இறுதிச்சடங்கு. திக்விஜய் சிங் கூறிய சர்ச்சை கருத்தால் பரபரப்பு

abdul and yakubதூக்கு தண்டனையை இந்தியாவில் இருந்து ஒழிக்க பாடுபட்ட முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் இறுதிச்சடங்கு அதே நாளில் மும்பை வெடிகுண்டு தாக்குதலுக்கு முக்கிய காரணகர்த்தாவான யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பலர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பகிருந்து வரும் நிலையில்  காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் ‘ஒரே நாளில் இரண்டு இஸ்லாமியர்களின் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது என்று கூறியுள்ளது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை தாக்குதல் தீவிரவாதியை, அப்துல் கலாமுடன் ஒப்பிட்டு பேசிய காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங், அப்துல்கலாமை அவமதித்துவிட்டதாக பலர் கருத்து கூறி வருகின்றனர். இதனால் சமூகவலைதள ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

“யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டு உள்ளார். தீவிரவாத தாக்குதல் குற்றவாளிக்கு தண்டனை நிறைவேற்றுவதில் அரசு மற்றும் நீதித்துறை மூலம்  போதுமான அவசரமும், அர்ப்பணிப்பும் காட்டப்பட்டு உள்ளது. இதேபோன்று சாதி மற்றும் மதத்திற்கு அப்பாற்பட்டு, அனைத்து தீவிரவாத வழக்குகளிலும் நீதித்துறை மற்றும் அரசு இதே அர்ப்பணிப்பை காட்டும் என்று நான் நம்புகின்றேன். பிற தீவிரவாத வழக்குகளிலும் இதுபோன்று நடத்தப்படுமா என்பது என்னுடைய சந்தேகம். அதனை பார்ப்போம்.

என்ன ஒரு பொருத்தம்! இரண்டு இஸ்லாமியர்களின் இறுதிச்சடங்கு ஒரே நாளில் நடைபெறுகிறது. இந்தியாவிற்காக கலாம் தான் செய்த சாதனைகள் மூலம், அனைவரையும் பெருமை அடைய செய்து உள்ளார். யாகூப் மேமன் தீவிரவாதிகளுக்கு உதவிசெய்து, மொத்த சமூதாயத்திற்கே அவமானத்தை ஏற்படுத்தி உள்ளார்”  என்று திக்விஜய் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மும்பை தாக்குதல் குற்றவாளியை, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுடன் ஒப்பிட்டு, திக்விஜய் சிங் கருத்து வெளியிட்டுள்ளதற்கு சமூக வலைதளங்களில் பதிவர்கள், கடும் எதிர்ப்புகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.

Leave a Reply