சட்டசபையில் ‘தனி ஒருவராக’ தினகரன்

சட்டசபையில் ‘தனி ஒருவராக’ தினகரன்

தமிழக சட்டசபை இன்று கவர்னர் உரையுடன் கூடியது. சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக வெற்றி பெற்ற தினகரனுக்கு 148வது இருக்கையை சபாநாயகர் ஒதுக்கியிருந்தார்.

தினகரன் ஆதரவாளர்களான 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்ததால் அவர்கள் சட்டமன்றத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. எனவே தினகரனின் வரிசையில் யாரும் இல்லாமல் அவர் ஒருவர் மட்டும் தனி ஒருவராக அமர்ந்திருந்தார்.

மேலும் சட்டசபைக்கு தினகரன் பேண்ட் சர்ட் அணிந்து வந்திருந்தார். இதுகுறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘அதிமுகவை கைப்பற்றியதும் அதிமுக கரை வேட்டி கட்டுவேன்’, அதுவரை பேண்ட் தான்’ என்று கூறினார்,.