என்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் டிடிவி தினகரனுக்கு இல்லை. வைத்திலிங்கம் எம்பி

என்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் டிடிவி தினகரனுக்கு இல்லை. வைத்திலிங்கம் எம்பி

டிடிவி தினகரனை பல நாட்களுக்கு முன்பே கட்சியில் இருந்து நீக்கிவிட்டோம். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவருக்கு என்னை நீக்கும் அதிகாரம் இல்லை என்று அதிமுக எம்பி வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

நேற்றைய ஓபிஎஸ்-ஈபிஎஸ் இணைப்புக்கு பின்னர் மிக விரைவில் அதிமுக பொதுக்குழு கூடி சசிகலாவை கட்சியில் இருந்தும் பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் நீக்குவோம் என வைத்திலிங்கம் எம்பி அறிவித்தார்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து வைத்திலிங்கம் எம்பி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக சற்றுமுன் டிடிவி தினகரன் அறிவித்தார். இந்த நிலையில் தினகரனின் நடவடிக்கைக்கு பதிலளித்துள்ள வைத்திலிங்கம், ‘என்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் டிடிவி தினகரனுக்கு இல்லை. ஜெயலலிதாவால் நீக்கபட்டவர்தான் அவர். துணைபொது செயலாளர் பொறுப்பில் இருந்து ஏற்கனவே தினகரன் நீக்கப்பட்டு விட்டார். இன்னும் 2 -3 நாட்களில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் எங்கள் பக்கம் வருவார்கள். எங்களுக்கே 99.99 சதவீத தொண்டர்கள் ஆதரவு உள்ளது’ என்று கூறினார்.

Leave a Reply