கட்சி பதிவு செய்த பின்னரும் சுயேட்சையா? அதிர்ச்சியில் டிடிவி தினகரன்
தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சி கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது சுயேட்சை சின்னத்தில் தான் போட்டியிட்டனர் அமமுக என்ற கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படாததால் அக்கட்சிக்கு ஒரே சின்னம் வழங்க முடியாது என்று தேர்தல் ஆணையம் மறுத்து இருந்தது
அதன் பின்னர் டிடிவி தினகரன் சுப்ரீம் கோர்ட்டு சென்று அமமுக வேட்பாளர்களுக்கு ஒரே சின்னத்தை வாங்கினார். இருப்பினும் அவரது வேட்பாளர்கள் சுயேச்சை வேட்பாளர்களாக கருதப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். இதனையடுத்து அவருக்கு அரசியல் கட்சிக்கான சின்னம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது
ஆனால் சற்று முன் தினகரன் கட்சியில் இருந்து பிரிந்து வந்த புகழேந்தி பேட்டி ஒன்றில் கூறியபோது தினகரன் கட்சிக்கு உள்ளாட்சி தேர்தலில் தனிச் சின்னம் வழங்க மாநில தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்ததாக கூறியுள்ளது தினகரன் கட்சியினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது