2ஆம் கூவத்தூரில் இருந்து வெளியேறும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்

2ஆம் கூவத்தூரில் இருந்து வெளியேறும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சுமார் 20 பேர் 2ஆம் கூவத்தூர் என்று கூறப்படும் பாண்டிச்சேரியில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருக்கும் நிலையில் நாளை சென்னை திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஆளுநரிடம் இருந்து முதல்வர் மாற்றம் உள்பட எந்த தகவலும் இல்லாத நிலையில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் நாளை விடுதியை விட்டு வெளியேற முடிவு செய்திருப்பதாகவும், நாளை மாலை சென்னை வந்து அதன் பின்னர் நாளை மறுநாள் காலை டெல்லி சென்று குடியரசுத் தலைவரை செப்டம்பர் 1-ம் தேதி சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

ஏற்கனவே திமுக எம்.எல்.ஏக்களும் குடியரசு தலைவரை சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் கேட்டுள்ள நிலையில் தினகரன் அணி எம்.எல்.ஏக்களும் குடியரசு தலைவரை சந்திக்கவுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply