ஓபிஎஸ்-க்கு அழைப்பு விடுத்த தினகரன்? காட்சி மாறுகிறதா?

ஓபிஎஸ்-க்கு அழைப்பு விடுத்த தினகரன்? காட்சி மாறுகிறதா?

சிறையில் இருந்து திரும்பி சென்னை வந்தவுடன் தினகரன் போன் செய்தது ஓபிஎஸ் அவர்களுக்குத்தானாம். போன் பேச்சில் தினகரன் குரலில் எல்லைமீறிய கனிவு இருந்ததாக கூறப்படுகிறது. ‘என்னை நம்பி வாருங்கள். உங்களுக்கு என்ன மரியாதை தர வேண்டுமோ, அதை நான் தருவேன். இனி அ.தி.மு.க ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் உங்களைக் கூப்பிடுகிறேன். என கூற பன்னீர் தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லையாம்.

ஆட்சியை கவிழ்க்க விருப்பமில்லாத தினகரன், முதுகில் குத்தும் எடப்பாடியை விட நேருக்கு நேராக மோதிய ஓபிஎஸ் உடன் சமரசம் செய்வது நல்லது என்று யோசிக்கின்றாராம். ஓபிஎஸ்க்கு ஓரளவுக்கு மக்கள் செல்வாக்கு இருப்பது என்பதையும் ஓபிஎஸ் உடன் இணணந்து பாஜகவுடன் கூட்டணி வைத்தால் எளிதில் தேர்தலில் வெற்றி பெற்றும் விடலாம் என்பதும் தினகரன் கணக்கு

ஆனால் சசிகலா குடும்பத்தை முழுவதுமாக ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற கொள்கையில் இருக்கும் ஓபிஎஸ், தினகரனுடன் இணைவாரா? என்பதுதான் இப்போதைக்கு மில்லியன் டாலர் கேள்வி

Leave a Reply