நாளை தினகரன் கைதா?

நாளை தினகரன் கைதா?

அதிமுகவின் இரு அணிகளும் இணைய இன்று வரை டிடிவி தினகரன் கொடுத்திருந்த நிலையில் இரு அணியின் தலைவர்களும் பரபரப்பின் உச்சத்தில் இருக்கின்றனர். நாளை அல்லது நாளை மறுநாள் தினகரன் தலைமை கழகத்திற்கு வந்து கட்சிப்பணி ஆற்றுவார் என்று தினகரன் தரப்பு அறிவித்துள்ளதால் அதை எப்படி தடுப்பது என்று ஆழ்ந்த யோசனையில் உள்ளது அதிமுகவின் இரு அணிகளும்

தினகரன் தலைமைக்கழகம் வந்தால் கைது செய்யலாமா? அல்லது போலீஸ் பாதுகாப்பு மட்டும் போட்டு யாரையும் உள்ளே விடாமல் செய்யலாமா? என்பதுதான் முதல்வர் எடப்பாடியின் யோசனை என்று அவரது தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சற்றுமுன், தமிழகம் முழுவதும் உள்ள கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் நாளை சென்னை வரவேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார். ஓபிஎஸ் அழைப்பை அடுத்து அவரது அணியில் உள்ளவர்கள் சென்னையை நோக்கி வந்து கொண்டிருப்பதாக தகவல். நாளை அதிமுக அணிகளின் இணைப்பு, தினகரன் கைது போன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply