இரட்டை இலைக்காக லஞ்சம் கொடுத்த வழக்கில் திடீர் திருப்பம். தினகரனுக்கு மேலும் சிக்கல்

இரட்டை இலைக்காக லஞ்சம் கொடுத்த வழக்கில் திடீர் திருப்பம். தினகரனுக்கு மேலும் சிக்கல்

அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னத்தை லஞ்சம் கொடுத்து பெற முயன்றதாக டிடிவி தினகரன் மீதுஅவ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டுவதில் டெல்லி போலீசார் தீவிரமாக உள்ளனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் அப்ரூவராக சென்னையை சேர்ந்த கோபிநாத் என்ற வழக்கறிஞர் மாறியுள்ளதால் தினகரனுக்கு சிக்கல் மேல் சிக்கல் எழுந்துள்ளது.

சென்னை வழக்கறிஞர் கோபிநாத் டெல்லி மாஜிஸ்திரேட்டிடம் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த வாக்குமூலத்தில் ஹவாலா ஏஜென்டிடம் சுகேஷ் பணம் பெற்றதை தான் நேரில் பார்த்ததாகவும், பணத்தை பெற்றுக்கொண்ட சுகேஷ் சென்னையில் உள்ள நபரிடம் தொலைபேசியில் பேசியதாகவும் கூறியுள்ளார். இதனால் தினகரனின் வழக்கு வலுவடைந்துள்ளது.

இந்த வாக்குமூலம் காரணமாக தினகரனுக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அப்ரூவர் வாக்குமூலத்தை காரணம் காட்டி தினகரனுக்கு ஜாமீன் கொடுக்க டெல்லி போலீசார் நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

Leave a Reply