பெற்ற குழந்தையை ரூ.2 லட்சத்திற்கு விற்ற தாய். பணத்தை பிரிக்கும் போது தகராறு ஏற்பட்டதால் கைது.

childதிண்டுக்கல் அருகே ஒரு பெண் கடன் தொல்லை காரணமாக பெற்ற மகனை ரூ.2 லட்சம் விலைக்கு விற்ற தாய் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த 10 பேர் ஆகியோர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் அருகே எத்திலோடு என்ற பகுதியை சேர்ந்தவர் 25 வயது பேச்சியம்மாள் என்ற பெண்ணுக்கு கடந்த 3 வாரத்திற்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. பேச்சியம்மாளின் கணவர் பழனிச்சாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் பேச்சியம்மாள் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.
இதற்கிடையில் பேச்சியம்மாளின்  குடும்பம் வறுமையில் வாடியதால் அவருடைய தந்தை பக்கத்து வீட்டை சேர்ந்த கந்துவட்டிகாரரரிடம் கடன் வாங்கினார் ஆனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமலும், கடனுக்கு வட்டியும் கட்ட முடியாமலும் அவருடைய தந்தை இருந்ததால் அந்த குடும்பத்திற்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. எனவே குழந்தையை விற்று கடனை அடைத்து விடலாம் என்று பேச்சியம்மாளிடம் அவரது தந்தை யோசனை தெரிவித்தார். இதற்கு முதலில் பேச்சியம்மாள் சம்மதிக்கவில்லை எனினும், குடும்ப சூழ்நிலை காரணமாக பின்னர் சம்மதித்தார்.

அதன்படி குழந்தைகளை விற்கும் புரோக்கர்கள் காந்தி கிராமத்தை சேர்ந்த சிலரிடம் அணுகி அவர்கள் மூலம் பேச்சியம்மாளின் 23 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை திருவாரூர் அருகே மன்னார்குடியை சேர்ந்த வாசுகிக்கு ரூ.2 லட்சத்திற்கு குழந்தை விற்க பேச்சியம்மாளின் தந்தை ஏற்பாடு செய்தார். குழந்தையை விற்றா பின்னர் பணத்தை பிரிப்பதில் புரோக்கர்கள், தந்தை, மகளுக்கு ஆகியோர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. இந்த தகராறில் குழந்தை நிலக்கோட்டை யூனியன் அலுவலகம் அருகேயுள்ள குப்பைமேட்டில் வீசப்பட்டது. அங்கு கிடந்த குழந்தையை சமூக நலத்துறை ஊழியர்கள் மீட்டு போலீசாருக்கு தெரிவித்தனர். அதனடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் குழந்தையை ரூ.2 லட்சத்திற்கு விற்றது தெரிய வந்தது. இதுதொடர்பாக குழந்தையின் தாய் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply