காமன்வெல்த் போட்டியில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்த தமிழக வீராங்கனைகள் தீபிகா பலிக்கல், ஜோஸ்னா சின்னப்பா ஆகியோர்களுக்கு தலா ரூ.50 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
ஸ்காட்லாந்து நாட்டில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டியில், பெண்களுக்கான ஸ்குவாஷ் இரட்டையர் பிரிவில் தமிழக வீராங்கனை தீபிகா தங்கப்பதக்கம் வென்றார். அதே போல பெண்களுக்கான ஸ்குவாஷ் இரட்டையர் பிரிவில் மற்றொரு தமிழக வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
தங்கப்பதக்கம் வென்ற இரு வீராங்கனைகளுக்கும் தனித்தனியாக கடிதம் எழுதிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவர்களுக்கு பாராட்டு தெரிவித்ததோடு, அவர்கள் இருவருக்கும் தலா ரூ. 50 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.