சென்னையில் இருந்து நேரடியாக சரக்கு கப்பல் போக்குவரத்து கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை துறைமுகம் தற்போது ஆசியாவின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றாக செயல்பட்டு கொண்டு வருகிறது. இங்கிருந்து உலகின் பல நாடுகளுக்கும் நேரடியாக சரக்கு கப்பல் இயங்கி வரும் நிலையில் கடந்த 24ஆம் தேதி முதல் சென்னையில் இருந்து நேரடியாக வட ஐரோப்பா நாடுகளுக்கு செல்லும் சரக்கு கப்பல் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து கிளம்பும் இந்த கப்பல் கொழும்பு, சலாலா (ஓமன்) வழியாக இங்கிலாந்து நாட்டின் ஃபெலிக்ஸ்டோ என்ற நகருக்கு செல்கிறது. சென்னையில் இருந்து ஃபெலிக்ஸ்டோ செல்ல இந்த கப்பல் 21 நாட்கள் பயணம் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.