சினிமா ஆசை காட்டி கொல்கத்தா அழகியை விபச்சாரத்தில் தள்ளிய இயக்குனர் கைது.
சினிமா ஆசையால் பல அப்பாவி பெண்களின் வாழ்க்கை சீரழிந்து வருவதை பல செய்திகளில் பார்த்து வருகிறோம். திரைப்பட கம்பெனியே இல்லாமல் போலியான விளம்பரம் கொடுத்து இளம்பெண்கள் பலரை தவறான பாதைகளுக்கு கொண்டு செல்லும் கயவர்கள் நிறைந்த திரையுலகில் தற்போது ஒரு புதிய திடுக்கிடும் செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.
பிரபல திரைப்படம் ஒன்றில் நடிக்க ‘இளம் கதாநாயகி தேவை’ என்ற போலியான விளம்பரம் ஒன்றை பார்த்த கொல்கத்தா மாடல் அழகி ஒருவர் பரிதாபமாக விபச்சாரத்தில் தள்ளப்பட்டதாகவும், அவருடைய வாழ்க்கை சீரழிவதற்கு காரணமான இயக்குனர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த போலியான விளம்பரத்தை கொடுத்திருந்தவர் ஹனுமான் நாயக் என்பவர். இவர்தான் படத்தின் டைரக்டர் என்றும், தயாரிப்பாளர் லட்சுமணன் என்றும் பத்திரிகையில் விளம்பரம் செய்திருந்தார்.
இதை உண்மை என்று நம்பிய கொல்கத்தா மாடல் அழகி ஒருவர் ஐதராபாத்துக்கு சென்று ஹனுமன் நாயக்கை சந்தித்தார். மேக்கப் டெஸ்ட், மேட்சிங் டிரஸ் என்று விதம் விதமாக புகைப்படம் எடுக்கப்பட்டது. ‘சூப்பர்’ உங்களை கதாநாயகியாக தேர்வு செய்து விட்டோம் என்று ஹனுமன் நாயக் சொல்ல, குளிர்ந்து போய்விட்டார் அந்த அழகி. தயாரிப்பாளருக்கு அவர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.
சூட்டிங்கும் தொடங்கியது. ‘ஷாட் ரெடி… கட்…’ என்று தன்னை பெரிய டைரக்டராக காட்டிக் கொண்டார் ஹனுமன் நாயக். சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தினார். அந்த அழகி கதாநாயகி கனவில் டைரக்டர் சொன்ன சொன்னபடியெல்லாம் ஆடினார். அதன் பிறகு வரும் ஆபத்தை உணராமலே…
இந்தநிலையில், நாயகியாக தேர்வு செய்யப்பட்ட கொல்கத்தா அழகியின் படம் விதம் விதமாக வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளத்தில் வலம் வரத்தொடங்கியது. அதில் ‘இந்த அழகியை உங்கள் விருப்பப்படி அனுபவிக்க தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்…’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கான கட்டணமும் தெரிவிக்கப்பட்டிருந்தது. சினிமா ஆசையில் சிக்கிக் கொண்ட அந்த அழகியை டைரக்டர், தயாரிப்பாளர் என்று ‘சீன்’ காட்டியவர்கள் விபச்சாரத்தில் தள்ளியதாக கூறப்படுகிறது.
வாட்ஸ்-அப் மூலம் வந்த தகவல் குறித்து விசாரணை நடத்திய போது போலீசார் நடத்திய விசாரணையில் உண்மை வெளியானது. சினிமா ஆசைகாட்டி கொல்கத்தா அழகியை விபசாரத்தில் ஈடுபடுத்திய சினிமா டைரக்டர ஹனுமன் நாயக், தயாரிப்பாளர் லட்சமணன் ஆகியோரை பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் கைது செய்தனர். கொல்கத்தா அழகியை மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்