தமிழித்திரையுலகில் இயக்குனர் சிகரம் என்று போற்றப்படும் கே.பாலசந்தரின் மகன் கைலாசம் நேற்று சென்னையில் நிமோனியா காய்ச்சல் காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 53. இன்று அவரது இறுதிச் சடங்கு சென்னையில் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1vTqINf” standard=”http://www.youtube.com/v/8mgIDZfg39Q?fs=1″ vars=”ytid=8mgIDZfg39Q&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep3911″ /]
கடந்த மூன்று வாரங்களாக கே.பாலசந்தரின் மூத்த மகன் கைலாசம் நிமோனியா காய்ச்சலால் நுரையீரல் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சைக்கு பலன் அளிக்காமல் அவர் மரணம் அடைந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. மரணம் அடைந்த கைலாசத்திற்கு கீதா என்ற மனைவியும், விலாசினி என்ற மகளும், விஷ்ணு பாலா என்ற மகனும் உள்ளனர்.
எஞ்சினியரிங் பட்டப்படிப்பு படித்துள்ள கைலாசம், அமெரிக்காவில் ஆடியோ சவுண்ட் துறையிலும் பட்டம் பெற்றவர். கே.பாலசந்தரின் கவிதாலயா திரைப்பட நிறுவனம் மற்றும் மின் பிம்பங்கள் என்ற தொலைக்காட்சி தொடர் தயாரிக்கும் நிறுவனம் ஆகியவற்றை நிர்வகித்து வந்த கைலாசம், தூர்தர்ஷனிலும் பணியாற்றியுள்ளார்.
தனது தந்தை பாலசந்தரைப் போலவே பல நடிகர், நடிகைகளை சின்னத்திரையில் அறிமுகப்படுத்திய பெருமை கைலாசத்திற்கு உண்டு. கைலாசம் சிறந்த ஆவணப்படங்களையும் இயக்கியுள்ளார். இவர் இயக்கிய வாஸ்து மரபு என்ற ஆவணப்படம் தேசிய விருதினைப் பெற்றது.
மறைந்த கைலாசம் அவர்களுக்கு திரையுலக பிரபலங்கள் தங்கள் இறுதியஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.