இயக்குனர் கவுதம்மேனன் மீது மோசடி வழக்கு

விண்ணைத்தாண்டிவருவாயா படத்தை இந்தியில் டப்பிங் செய்ய ராயல்டி கொடுக்காமல் ஏமாற்றியதாக இயக்குனர் கவுதம்மேனன் மீது மோசடி வழக்கு ஒன்றை பதிவு செய்து விசாரணை நடத்த போலீஸாருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

விண்ணைத்தாண்டிவருவாயா படத்தின் தயாரிப்பாளர் ஜெயராமன். இவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில்படத்தின் இயக்குனர் கவுதம்மேனன் தனக்கு தரவேண்டிய ராயல்டியை கொடுக்காமல் என்னுடைய தயாரிப்பு படமான விண்ணைத்தாண்டிவருவாயா படத்தை இந்தியில் டப்பிங் செய்து வருவதாகவும், இது குறித்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நாடியதாவும், அந்த கோர்ட்டின் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டும் போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மனுதாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது சென்னை ஐகோர்ட் நீதிபதி போலீஸாருக்கு கண்டனம் தெரிவித்ததோடு, உடனடியாககவுதம் மேனன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டார். அவருடைய உத்தரவின் படி நேற்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் ஜான் அருமை நாதன் வழக்குப்பதிவு செய்தார். இயக்குனர் கவுதம்மேனன் உள்பட 5 பேர் மீது மோசடி செய்தல், ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அஜீத்தின் புதியபடத்தை ஆரம்பிக்க உள்ள நிலையில் கவுதம்மேனன் மீது இப்படி ஒரு மோசடி வழக்கு பதிவானதால் கோலிவுட்டில் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply