இயக்குனரை மன்னிப்பு கேட்க வைத்த ராகவா லாரன்ஸ்

இயக்குனரை மன்னிப்பு கேட்க வைத்த ராகவா லாரன்ஸ்

‘மக்கள் சூப்பர் ஸ்டார் என்று தனக்கு தானே பட்டம் சூட்டி கொண்ட ராகவா லாரன்ஸ் ரசிகர்கள் எதிர்ப்பு காரணமாக எனக்கு தெரியாமல் இயக்குனர் அந்த பட்டத்தை டைட்டிலில் போட்டுவிட்டார் என்று கூறி சமாளித்து வருகிறார்.

ஒரு ஹீரோ ரிலீஸ் ஆகும் முன்னர் முழு படத்தையும் பார்க்க வில்லை என்பதை எல்கேஜி குழந்தை கூட நம்பாது என்பது ராகவா லாரன்சுக்கு தெரிந்தும் ஏன் இந்த சப்பைக்கட்டு என்று தெரியவில்லை

இந்நிலையில் ‘மொட்டசிவா கெட்டசிவா’ படத்தின் இயக்குனரை மன்னிப்பு கடிதம் எழுதவைத்து அதை பத்திரிகைகளுக்கும் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

என் படத்தின் கதாநாயகனான ராகவா லாரன்ஸ் அவர்களின் நற்செயலையும், மனித நேயத்தையும் கருத்தில் கொண்டு அவருக்கு ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தை இப்படத்தில் பயன்படுத்தி இருந்தேன். எங்கள் அன்பின் வெளிப்பாடாக அளித்த இந்த பட்டம் அவரை ஆச்சரியப்பட வைக்கவில்லை. என்னை உடனே கூப்பிட்டு கண்டித்தது மட்டுமில்லாமல் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள அழைத்து உலக சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும் தான் என்றும், எனக்கு இந்த பட்டம் வேண்டாம் என்றும் கூறியுள்ளார். படத்தில் வரும் அந்த பட்ட பெயரை நீக்குவதற்கான கால அவகாசத்தை கருத்தில் கொண்டு மன்னித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Leave a Reply