ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்னுக்கு தடை. விக்ரமன் அதிரடி

peter hein

ரஜினிகாந்த் நடித்த சிவாஜி, எந்திரன் போன்ற பல படங்களுக்கு சண்டைபயிற்சி அமைத்த ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்னுக்கு இயக்குனர் சங்கம் தடை விதித்துள்ளது. கோலிவுட் படங்களுக்கு அவரை ஒப்பந்தம் செய்யக்கூடாது என இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன் இன்று அதிரடியாக தடை விதித்துள்ளார்.

ஹாலிவுட் படங்களுக்கு இணையாக சண்டைக்காட்சிகள் அமைப்பதில் வல்லவர் ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன். முதல்வன் படத்தில் அர்ஜூன் தீப்பிடித்து ஓடுவது போன்ற காட்சியில் டூப்பாக நடித்தவர் இவர்தான். ஷங்கரின் அனைத்து படங்களிலும் சண்டைப்பயிற்சி செய்யும் அளவுக்கு பிரபலமான ஸ்டண்ட் மாஸ்டராக கோலிவுட்டில் புகழ்பெற்றிருந்தார்.

இந்நிலையில் பெப்சியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பெப்சி அமைப்பை அநாகரீகமாக விமர்சனம் செய்த காரணத்தால் இவர் மீது தடை விதிப்பதாக இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன் இன்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் இவர் தற்போது பணிபுரிந்து கொண்டிருக்கும் படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply