மாயமான விமானத்தை தேடும் பணி நிறுத்தமா? 29 பேரின் கதி என்ன?
சென்னை தாம்பரம் விமான படைத்தளத்தில் இருந்து ஜூலை மாதம் 22-ம் தேதி ஏ.என்-32 ரக விமானம் ஒன்று 29 பேருடன் புறப்பட்டு சென்றது. ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களில் அந்த விமானம் திடீரென மாயமானது. மாயமான விமானத்தை தேடும் பணியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் போர்க் கப்பல்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஆகிய ஈடுபடுத்தப்பட்டும் நம்பகமான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் கடலின் மேற்பரப்பில் விமானத்தை தேடும் பணி சமீபத்தில் நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது விமானத்தை தேடும் மொத்த பணியையும் வரும் 7ஆம் தேதியுடன் நிறுத்தப்போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே இந்த விமானத்தில் பயணம் செய்த 29 பேர்களின் கதி கேள்விக்குறியாகியுள்ளது.
விமானம் மாயமாகி 42 நாட்கள் ஆகிவிட்டதாலும், இதுவரை சாதகமான தகவல்கள் கிடைக்கவில்லை என்பதாலும் வரும் 7-ம் தேதியுடன் விமானத்தை தேடும் பணியை முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். விமானத்தை கண்டு பிடிக்க அடுத்து எந்த மாதிரி யான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து நேற்று சென்னையில் ராணுவ அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இதில் கப்பல் படை அதிகாரி கள், ஆராய்ச்சி கப்பல்களின் அதிகாரிகள், விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர்.