மோடியின் வெளிநாட்டு செலவு விபரங்கள் குறித்த முக்கிய உத்தரவு

மோடியின் வெளிநாட்டு செலவு விபரங்கள் குறித்த முக்கிய உத்தரவு

பாரத பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட வெளிநாடு பயண செலவுகள் குறித்த விபரங்களை வெளியிட மத்திய தகவல் ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது.

லோக்கேஷ் என்ற ஒய்வு பெற்ற கடற்படை அதிகாரி ஒருவர், பிரதமர் மோடியின் வெளிநாடு பயண செலவு குறித்து விபரங்கள் கேட்டு வெளியுறவு அமைச்சகத்திடம் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், கடந்த 2013ம் ஆண்டு முதல் 2017 வரையில் ஏர்இந்தியா விமானம் மூலம் பிரதமர் மோடி மேற்கொண்ட வெளிநாட்டு பயணத்திற்கு எவ்வளவு செலவுகள் ஏற்பட்டது, அதற்கு செலுத்திய தொகை, செலுத்த வேண்டிய தொகை, ரசீதுகள் விபரங்கள் கேட்டுள்ளார். ஆனால், லோக்கேஷின் இந்த கேள்விக்கான தகவலை வெளியிட்டால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறி தகவல் வெளியிட மறுக்கப்பட்டது.

இது குறித்து லோகேஷ், மத்திய தலைமைத் தகவல் ஆணையர் ஆர்.கே. மாத்தூரிடம் மேல்முறையீடு செய்தார். மேலும், ஏர் இந்தியா நிறுவனம் கடும் நிதிநெருக்கடியில் இருக்கும் நிலையில், மோடியின் இந்த பயண செலவு குறித்து நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துவது அவசியம் என்றும் அழுத்தம் கொடுத்துள்ளார்.

இந்த விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், செலவுத்தொகை அனைத்தும் வெவ்வேறு காலகட்டங்களில் உள்ள அதிகாரிகள் குறிப்பிடப்பட்டுள்ளதால், அவற்றை தேடி வெளியிடுவது சிரமம் என்று வாதிட்டது.

இதனை ஏற்க மறுத்த மத்திய தகவல் ஆணையர் ஆர்.கே. மாத்தூர், ஏர்இந்தியா மூலம் பிரதமர் மேற்கொண்ட வெளிநாட்டு பயண செலவுகள் வெளியிட வேண்டும் என்றும், ஏர்இந்தியாவுக்கு உள்ள நிலுவைத் தொகையை செலுத்தியிருந்தால், அதற்கான பில் மற்றும் நகல் ஆகியவற்றையும் வெளியிட வெளியுறவு அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply