பிறந்தநாள் கேக் வழியாக பரவும் நோய்கள்!

birthday

கேக் இல்லாமல் கொண்டாட்டம் இல்லை. கேக்கை பார்த்தவுடனே தான் பிறந்தநாள் மூடே வருகிறது. பலூன், கலர் கலர் தோரணங்கள், வாழ்த்துக்கள் எனத் தொடங்கும் பிறந்த நாள், சாக்லெட், கேக், பரிசு பொருட்களுடன் சந்தோஷத்தின் சிகரத்துக்கே நம்மை அழைத்துச் சென்றுவிடும்.ஆனால், கேக் வெட்டுவதற்கு முன்பு அதன் மேல் இருக்கும் மெழுகுவர்த்தியை ஊதி அனைக்கும் கலாச்சாரத்தால், பல்வேறு நோய்களை நாமே வலிய வரவழைத்துக் கொள்கிறோம் என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்!

பணத்தைச் செலவழித்துக் கொண்டாட்டத்தைத் தொடங்குகிறோம். ஆனால் அதனுடன் சேர்த்து வைர‌ஸையும், பாக்டீரியாவையும் பகிர்ந்து கொள்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

ஒரு குழந்தை தன் வாயால் ஊதி அனைத்த மெழுகுவர்த்திப் பொருந்திய கேக்கின் மேல் பரப்பில், சுமார் 3000 கிருமிகள் உள்ளன என்கிறது ஆஸ்திரேலியா நேஷனல் ஹெல்த் அண்ட் மெடிக்கல் ரிசர்ச் கவுன்சில். அதில், ஒரு பகுதியாகக் கட் பண்ணும் ஒரு கேக் பீஸில் குறைந்தது 189 கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டன. தும்மல், இருமல் பிரச்னை இருந்தால் எப்படி அது கிருமிகள் மூலமாக மற்றவர்களுக்குப் பரவுமோ அதுபோலப் பிறந்தநாள் கேக்கின் மூலமாகவும் பரவுகிறது என்கிறது அந்த ஆராய்ச்சி..

சுவாச வால்வில் தொற்று, வைரஸ், ப்ளூ, நோரோ வைரஸ் போன்றவை சில நிமிடங்களில் மற்ற குழந்தைகளுக்குப் பரவிவிடும். மேலும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்த குழந்தைகளாக இருந்தால், அவர்களுக்கு நோய் சட்டெனத் தாக்கும்.

எனவே, பிறந்தநாளை கேக் வைத்து கொண்டாடும்போது, அதன் மீது மெழுகுவர்த்தி வைத்து ஊதாதீர்கள். ‘கட்டாயம் மெழுகுவர்த்திகளை ஊதிதான் கொண்டாடுவேன்’ என்றால் அந்தக் கேக்கை மற்றவர்களுக்குச் சாப்பிட கொடுக்காதீர்கள். கப் கேக்குகளை வாங்கி வைத்துக் கொண்டு, அதை மற்றவர்களுக்குக் கொடுக்கலாம்.

Leave a Reply