இணைந்தது வீடியோகான் – டிஷ்டிவி:

இணைந்தது வீடியோகான் – டிஷ்டிவி:

இந்தியாவில் உள்ள டிஷ் டிவி நிறுவனங்களின் போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஒருசில நிறுவனங்கள் இந்த போட்டியை தாக்கு பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் விடியோகான் நிறுவனத்தின் d2h சேவையில் டிஷ் டிவி தற்போது இணைந்துள்ளது. இந்த இணணப்பு மூலம் வீடியோகான் இந்தியாவின் மிகப்பெரிய டிடிஎச் சேவை நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பம் மாதம் விடியோகான் மற்றும் டிஷ் டிவி நிறுவனங்கள் இணைப்புக்கான ஒப்பந்தம் உறுதிசெய்யப்பட்ட நிலையில் . தற்போது பல்வேறு நடைமுறைகளுக்குப் பின்னர் இந்த இரு நிறுவனங்களும் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது..

இந்த இணைப்பு மூலம் வீடியோகான் நிறுவனம் 2.8 கோடி வாடிக்கையாளர்களை கொண்டு டிடிஎச் சேவையில் இந்தியாவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

dish tv videocon d2h merge to create largest dth provider

Leave a Reply