ரகுராம் ராஜன் இந்தியர் அல்ல. உடனே பதவி நீக்குங்கள். பிரதமருக்கு சுவாமி கடிதம்

ரகுராம் ராஜன் இந்தியர் அல்ல. உடனே பதவி நீக்குங்கள். பிரதமருக்கு சுவாமி கடிதம்

Subramanian-Swamyஇந்திய ரிசர்வ் வங்கி தலைவர் ரகுராம் ராஜன் மீது ஏற்கனவே குற்றம் சுமத்தியுள்ள சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் ஒருமுறை அவரை பதவியில் இருந்து நீக்குமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளதாவது: ரகுராம் ராஜன் இந்தியர் அல்ல. அவர் இந்தியாவின் பொருளாதாரத்தை வேண்டுமென்றே சீர்குலைத்தவர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்ட ரகுராம் ராஜனை, ஏன் பதவி நீக்கம் செய்ய கூடாது.

பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை குறைத்த ராஜனின் நடவடிக்கைகள் பொருளாதாரத்திற்கு பேரழிவாக அமைந்து விட்டது. ரகுரான் ராஜனின் பதவிக் காலத்தில் வரா கடன்கள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் நிரந்தர குடிமகனாக இருக்க தேவையான கிரீன் கார்டை ரகுராம் ராஜன் வைத்திருக்கிறார். இதனை புதுப்பிக்க ஆண்டு தோறும் அவர் அமெரிக்கா சென்று வருகிறார். எனவே அவர் மனதளவில் இந்தியர் அல்ல. அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply