சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் மொத்தம் சுமார் 3 லட்சம் பேர் பயிலுகின்றனர். இந்த கல்வி ஆண்டில் மாணவ, மாணவியர்கள் சேர்ந்து பயில விண்ணப்பிக்க டிச.1-ம் தேதி கடைசி நாளாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 259 படிப்புகள்: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேவையை கருதி 1979-ல் தொலைதூரக்கல்வி இயக்ககம் தொடங்கப்பட்டது. அண்ணாமலைப் பல்கலை. தொலைதூரக்கல்வி மையத்தில் புதுதில்லி தொலைதூரக்கல்வி கவுன்சில் (Distance Education Council, New Delhi) அனுமதி பெற்ற மொத்தம் 259 படிப்புகள் நடத்தப்படுகின்றன. மருத்துவம் படிப்புகள் 12-ம், மருந்தியல் படிப்புகள் 2-ம். வேளாண் படிப்புகள்- 9-ம், பொறியியல் படிப்புகள் 53-ம் மற்றும் கலை, அறிவியல், தமிழ், இசை உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த பல்வேறு இளங்கலை, முதுகலை, டிப்ளமா, முதுநிலை டிப்ளமா படிப்புகள் நடத்தப்படுகின்றன.
3லட்சம் பேர் பயிலுகின்றனர்: தொலைதூரக்கல்வி மையத்தில் சுமார் 3 லட்சத்து 1940 பேர் பயின்று வருகின்றனர். கடந்த ஆண்டு மட்டும் மொத்தம் 1 லட்சத்து 35 ஆயிரத்து 95 பேர் அனுமதி சேர்க்கை செய்துள்ளனர். இந்த ஆண்டு சுமார் 1.50 லட்சம் அனுமதி சேர்க்கை செய்வார்கள் என எதிபார்க்கப்படுகிறது.
கல்வி உதவித்தொகை:
தொலைதூரக்கல்வி மையத்தில் தொழில்படிப்பு பயிலும் எஸ்சி., எஸ்டி மாணவர்களுக்கும், பார்வையற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் தமிழகஅரசால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பெற்றுத்தரப்படுகிறது. இந்த கல்வி ஆண்டில் மாணவர்கள் சேருவதற்கான விண்ணப்பிக்கும் தேசி டிச.1-ம் தேதி கடைசி நாளாகும் என அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்கக இயக்குநர் முனைவர் ஆர்.எம்.சந்திரசேகரன் தெரிவித்தார்.