இன்று தொலை தூர கல்வித் தேர்வு முடிவுகள் வெளியீடு!!

தற்போது கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதை அடுத்து பள்ளிகள், கல்லூரிகளில் நேரடி வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

பொதுத்தேர்வுகள், போட்டித் தேர்வுகள் மீண்டும் நடத்தப்பட்டு வருகிறது.

இன்று தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

2021 டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுக்கான முடிவுகள் இன்று மாலை 6 மணிக்கு http://ideunom.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.