லிங்கா படம் தோல்வி என்றும், அதனால் தங்களுக்கு பலகோடி நஷ்டம் என்றும் கூறி ஒருசில விநியோகிஸ்தர்கள் கடந்த 10ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த உண்ணாவிரத்ததை முன்னின்று நடத்திய திருச்சி மற்றும் தஞ்சை ஏரியாவின் லிங்கா விநியோகிஸ்தர் சிங்காரவேலனிடம் நிருபர்கள் கேட்டபோது, ‘லிங்கா நஷ்ட ஈடு விவகாரத்தில் கத்தி படத்தின் வெற்றியை கூற என்ன காரணம்? இதன் பின்னணியில் விஜய் இருக்கின்றாரா? என்று கேட்டபோது அதற்கு பதிலளித்த சிங்காரவேலன், ‘கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த படங்களில் கத்தி நல்ல லாபத்தை கொடுத்த படம் என்பதை சுட்டிக்காட்டவே அந்த உதாரணத்தை கூறியதாகவும், மற்றபடி விஜய்க்கும் இந்த விவகாரத்திற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்றும் கூறினார்.
மேலும் ரஜினி பிறந்த நாள் என்ன தேசிய விடுமுறையா? என்று கூறியதற்காக தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் ஆனால் நஷ்ட ஈடு விஷயத்தில் பின்வாங்கப்போவதில்லை என்றும், தொடர்ந்து இன்னொரு உண்ணாவிரத போராட்டம் நடத்தவும் விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறினார்.
மேலும் பெரிய நடிகர்களின் படங்கள் தோல்வி அடையும்போது நஷ்ட ஈடு பெறுவது வாடிக்கைதான் என்றும் இதற்கு முன்னர் தலைவா, பில்லா 2, ரெட் மற்றும் அஞ்சான் படங்கள் தோல்வி அடைந்தபோது நஷ்ட ஈடு பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.