திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருக்கும் என்.பாலசந்தர் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பிற்கு ஒருவர் நியமனம் செய்யப்படும் வரை, மாவட்ட கட்சி பணிகளை முக்கூர் என்.சுப்பிரமணியன் (திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்) கூடுதலாக மேற்கொள்வார்.
நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருக்கும் கே.ஆர்.அர்ஜூனன் எம்.பி. இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் பால.நந்தகுமார் (மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருக்கும் கே.வி. ராமலிங்கம் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். ஈரோடு மாநகர் மாவட்ட கழக செயலாளர் பொறுப்பிற்கு ஒருவர் நியமனம் செய்யப்படும் வரை, மாவட்ட கட்சி பணிகளை தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் (ஈரோடு புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர், வருவாய்த் துறை அமைச்சர்) கூடுதலாக மேற்கொள்வார்.
ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஜி.முனியசாமி இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பிற்கு ஒருவர் நியமனம் செய்யப்படும் வரை, மாவட்ட கட்சி பணிகளை ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. (எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர்) கூடுதலாக மேற்கொள்வார் என்று ஜெ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்.