+2 தேர்வு முடிவுகள்: மாவட்ட வாரியாக முதல் 3 இடங்களை பிடித்தவர்கள்!

chennai plus two student

இன்று காலை வெளியான +2 தேர்வு முடிவுகளில் மாவட்ட வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளின் விபரங்கள் தற்போது வெளிவந்துள்ளது.

சென்னை மாவட்டத்தில் அண்ணா ஆதர்ஸ் பள்ளி மாணவி ப்ரீத்தி, கோபாலபுரம் டி.ஏ.வி மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அறிவரசி, மதுமிதா ஆகியோர் 1185 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். 2வது இடத்தை கோபாலபுரம் டி.ஏ.பி. பள்ளி மாணவி மனிஷா பிடித்துள்ளார்.

ராமநாதபுரம் கல்வி மாவட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 110 பள்ளிகளை சேர்ந்த 14,501 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில், 93.6 சதவிகிதம் பேர் தேர்வு பெற்றுள்ளனர். இது, கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தைவிட 4.37 சதவிகித அதிகமாகும்.

மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை ராமநாதபுரத்தில் உள்ள செய்யதம்மாள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பெற்றுள்ளனர். இப்பள்ளி மாணவி மில்கா காட்பெல் 1,183 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடத்தையும், மாணவி ஹர்சினி 1,179 மதிப்பெண்கள் பெற்று 2 ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

இதே பள்ளியை சேர்ந்த மாணவர்கள் சரவணகுமாரும், ஷோபன் மனோஜும் தலா 1,178 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

திருச்சி கல்வி மாவட்டம்

திருச்சி கல்வி மாவட்டத்தில் துறையூரை சேர்ந்த சவுடாம்பிகை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி அகல்யா 1,189 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

சமயபுரம் எஸ்.ஆர்.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி வித்யா லட்சுமி 1,188 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பிடித்துள்ளார். துறையூர் சவுடாம்பிகை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி சோபிகா 1,187 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.

இதேபோல், சமஸ்கிருதத்தை முதல் பாடமாக எடுத்து படித்த எஸ்.வி.எஸ். மேல்நிலைப் பள்ளி மாணவி ஆனந்தி 1,193 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

திருச்சி கல்வி மாவட்டத்தில் மொத்தம் 31, 401 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில், 29,629 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்மூலம் திருச்சி கல்வி மாவட்டத்தில் 94.36 சதவிகிதமாக தேர்ச்சி விகிதம் உள்ளது.

திருவண்ணாமலை கல்வி மாவட்டம்

திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களை திருவண்ணாமலை சிஷ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களே பிடித்துள்ளனர். இதில், 1,189 மதிப்பெண்கள் பெற்று அந்த பள்ளி மாணவி கார்த்திகா முதலிடத்தையும், 1,180 மதிப்பெண்கள் எடுத்து சன்மதிபாலா என்ற மாணவியும், 1,179 மதிப்பெண்கள் எடுத்து மூன்றாம் இடத்தை பிரத்யுக்‌ஷாவும் பிடித்துள்ளனர்.

இந்த கல்வி மாவட்டத்தில் மொத்தம் 181 பள்ளிகளை சேர்ந்த 25,367 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர். இதில், 18.876 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த கல்வி மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் 74.4 சதவிதமாக உள்ளது.

பெரம்பலூர் கல்வி மாவட்டம

பெரம்பலூர் கல்வி மாவட்டத்தில் தேர்வு எழுதிய 7,548 மாணவ, மாணவியர்களில் 7,248 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 96.03 சதவிகித தேர்ச்சியாகும். இந்த கல்வி மாவட்டத்தில், 1,187 மதிப்பெண்கள் பெற்று பெரம்பலூர் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவன் கவின்ராஜும், ஈடன் கார்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவன் ஆனந்தும் முதலிடத்தை பிடித்துள்ளனர்.

இதேபோல், பெரம்பலூர் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவன் நவநீதன் 1,184 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். 1,183 மதிப்பெண்கள் எடுத்துள்ள ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவன் குரு மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.

வேலூர் கல்வி மாவட்டம்

வேலூர் கல்வி மாவட்டத்தில், வேலூர் சன்பீம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஹேமா 1,186 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், இராணிப்பேட்டை எல்.எஃப்.சி. உயர்நிலைப் பள்ளி மாணவி தீபிகா 1,185 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், அரக்கோணம் பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி சண்முகப்ரியா 1,183 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

ஈரோடு கல்வி மாவட்டம்

ஈரோடு கல்வி மாவட்டத்தில் இந்து கல்வி நிலையம் பள்ளியை சேர்ந்த நவீன்குமார் 1,189 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், ஈரோடு, பீ.வி.பீ. பள்ளியை சேர்ந்த ப்ரீத்தி ஸ்ரீ 1,88 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், இந்து கல்வி நிலையம் பள்ளியை சேர்ந்த ஸ்வாதி 1,187 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

கடலூர் கல்வி மாவட்டம்

நெய்வேலி ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த ஆர்த்தி 1,188 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், கடலூர் சி.கே.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி எழில் ஓவியா 1,187 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், நெய்வேலி ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி அனிதா 1,186 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

விருதாச்சலம் கல்வி மாவட்டம்

காட்டுமன்னார்கோவில் ஜி.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி கல்பனாதேவி 1,176 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், தவ அமுதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவன் சாலை தணிகைவேல் 1,175 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், அதே பள்ளியை சேர்ந்த நவநீதா 1,170 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

கோவை கல்வி மாவட்டம்

கோவை மாவட்டத்தில் மொத்தம் 317 பள்ளிகளை சேர்ந்த 36,573 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 34,705 மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர். இது 94.89 சதவிகித தேர்ச்சியாகும். கடந்த ஆண்டைவிட இது 1.94 சதவீதம் அதிகம்.

கோவை கல்வி மாவட்டத்தில் 1,188 மதிப்பெண்கள் பெற்று வித்ய விகாஸ் மெட்ரிக் பள்ளி மாணவி மேகலா முதல் இடத்திலும், 1,186 மதிப்பெண்கள் பெற்று ஜி.ஆர்.ஜி மெட்ரிக் பள்ளி மாணவர் ரவிரசங்கர் இரண்டாம் இடத்திலும், திவ்யலட்சுமி என்ற பிரிமியர் வித்ய விகாஸ் பள்ளி மாணவியும், மெல்பா என்ற எஸ்.ஆர்.எஸ். மெட்ரிக் பள்ளி மாணவியுன் தலா 1,185 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

திருப்பூர் கல்வி மாவட்டம்

திருப்பூர் கல்வி மாவட்டத்தில் 168 பள்ளிகளை சேர்ந்த 22,481 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில், 21,158 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், உடுமலை ஆர்.ஜி.எம். பள்ளி மாணவி ப்ரீத்தி 1,187 மதிப்பெண்களை பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். விவேகம் பள்ளியை சேர்ந்த மாணவி மோனிகா, சசூரி பள்ளியை சேர்ந்த நிவேதா, முத்தூர் விவேகானந்தா வித்யாலையா பள்ளியை சேர்ந்த கிருத்திகா ஆகிய மூன்று பேரும் 1,186 மதிப்பெண்களை பெற்று மாவட்டத்தின் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர்.

இதேபோல், உடுமலை ஆர்.ஜி.எம். பள்ளியை சேர்ந்த மாணவன் விஜய் மற்றும் முத்தூர் விவேகானந்தா வித்யாலையா பள்ளியை சேர்ந்த பவித்ரா ஆகியோர் 1,185 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தின் மூன்றாடம் இடத்தை பிடித்துள்ளனர். மேலும், இயற்பியல் பாடத்தில் 54 பேரும், வேதியியல் பாடத்தில் 45 பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 95 பேரும், கணிதத்தில் 111 பேரும், வணிகவியல் பாடத்தில் 188 பேரும் 200க்கு 200 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

விருதுநகர் கல்வி மாவட்டம்

விருதுநகர் கல்வி மாவட்டத்தில் 86 மையங்களில் 181 பள்ளிகளை சேர்ந்த 22,028 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 21,173 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் ராஜபாளையத்தை சேர்ந்த பி.ஏ.சி.எம். மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த ஞானசெல்வராஜ் என்ற மாணவன் 1,187 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். இதேபோல் ராஜபாளையம் சின்மயா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த காயத்திரி என்ற மாணவி 1,186 மதிப்பெண்கள் பெற்று 2 ஆம் இடத்தை பிடித்துள்ளனர்.

1,184 மதிப்பெண்கள் பெற்று அதே பள்ளியை சேர்ந்த மோகனப்ரியா, விருதுநகர் பி.எஸ்.சி. மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த நிவேதா, சிவகாசி லயன்ஸ் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவிகள் சத்யப்ரியா, தீப ப்ரியா ஆகிய நான்கு மாணவிகளும் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 69 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன. இதேபோல், இயற்பியல் பாடத்தில் 51 பேரும், வேதியியல் பாடத்தில் 17, தாவரவியல் 3, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 22, கணக்கில் 80, பொருளாதாரத்தில் 13, வணிகவியலில் 82, அக்கவுண்டன்சியில் 71 பேர் சென்ட்ம் பெற்றுள்ளனர்.

Leave a Reply