162 பேர்களை பலிகொண்ட இந்தோனேஷிய விமானத்தின் கருப்பு பெட்டி கிடைத்தது.

flightகடந்த மாதம் 26ஆம் தேதி ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டறியப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சர்வதேச மீட்புப்படையினர்களின் உதவியுடன் இந்தோனேஷிய கடற்படை கடந்த 15 தினங்களாக ஜாவா கடல்பகுதியில் விழுந்த விமானத்தின் பாகங்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் நேற்று மீட்புக்குழுவினர் விமானத்தின் வால் மற்றும் மையப்பகுதியை கண்டுபிடித்ததாகவும், அதில் கருப்புப்பெட்டியும் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கருப்புப்பெட்டியை ஆய்வு செய்தால், விமானம் ஏன் விபத்துக்குள்ளானது என்ற விபரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விமானத்தில் பயணம் செய்த 162 பேர்களும் பலியாகியுள்ளனர். இவர்களில் 46 உடல்கள் மட்டுமே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply