உடைந்தது தேமுதிக. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தலைமைக்கு எதிராக போர்க்கொடி

உடைந்தது தேமுதிக. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தலைமைக்கு எதிராக போர்க்கொடி

dmdkஅதிமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று முழங்கி வந்த தேமுதிக, அதற்குரிய கூட்டணியில் சேராமல், தொண்டர்களின் எதிர்பார்ப்பையும் மதிக்காமல், தன்னிச்சையாக மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாத மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக கூட்டணி வைத்தது. இதனால் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அதிருப்தி அடைந்தனர்.

அந்த அதிருப்தியை வெளிப்படுத்தியதால் தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் வி.சி. சந்திரகுமார், எஸ். ஆர் பார்த்திபன் உட்பட ஐந்து எம்.எல்.ஏக்கள்

கட்சியின் வளர்ச்சிக்காக எங்களுடை சொந்த காசை செலவு செய்தோம். ஆனால் எங்களிடம் எந்தவித கருத்தையும் கேட்காமல் விஜயகாந்த் தன்னிச்சையாக எடுத்த முடிவால் கட்சி பலவீனம் அடைந்ததோடு, அதிமுகவுக்கு சாதகமாகவும் அடைந்துவிட்டதாக வி.சி.சந்திரகுமார் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தேமுதிக தலைவரின் பலம் வாய்ந்த தலைவர்கள் என கருதப்பட்டவர்களே கட்சி தலைமைக்கு எதிராக கொடி தூக்கியுள்ளதால் தற்போது தேமுதிக உடைந்துவிட்டதாகவே கருதப்படுகிறது.

Leave a Reply