தேமுதிகவின் அங்கீகாரம் ரத்து. தேர்தல் ஆணையம் அதிரடி

தேமுதிகவின் அங்கீகாரம் ரத்து. தேர்தல் ஆணையம் அதிரடி
vijayakanth
தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்த தேமுதிக 2.4% வாக்குகளை மட்டுமே பெற்றதால் அக்கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து தற்போது ரத்து செய்துள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணைய அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த தேர்லில் ஒட்டுமொத்தமாக தேமுதிக 10,34,384 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது. 2009ஆம் ஆண்டு 10.1 சதவீதமாக இருந்த தேமுதிகவின் ஒட்டு சதவீதம் தற்போது 2.4 சதவீதமாக குறைந்துள்ளது. எனவே தேமுதிகவின் மாநிலக் கட்சி அங்கீகாரத்தை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழப்பதால் தேமுதிகவுக்கு முரசு சின்னம் நிரந்தரமாக கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படும்.

தேர்தல் ஆணையத்தின் விதிப்படி மொத்த தொகுதிகளில் 30 தொகுதிகளுக்கு ஒரு எம்எல்ஏ இருக்க வேண்டும். அந்த வகையில் தமிழகத்தில் குறைந்தபட்சமாக 8 எம்எல்ஏக்களாவது இருக்க வேண்டும். அல்லது, போட்டியிட்ட தொகுதிகளில் பெற்ற ஓட்டுகள் மாநில முழுவதும் பதிவான ஓட்டுகளில் 6 சதவீதம் அல்லது அதற்கு அதிகமாக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்தாகிவிடும்.

தற்போது தேமுதிகவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் விஜயகாந்த் தேமுதிக கட்சியை கலைத்து விடுவார் என்றே அரசியல் வட்டாரங்கள் கூறி வருகின்றன.

Chennai Today News: DMDK derecognised by Election Commission

Leave a Reply