விஜயகாந்த்-ராகுல்காந்தி பேச்சு. திமுக கூட்டணியில் தேமுதிக?

விஜயகாந்த்-ராகுல்காந்தி பேச்சு. திமுக கூட்டணியில் தேமுதிக?
rahul-gandhi
தனித்து போட்டி என்ற அறிவித்தாலும் இன்னும் தேமுதிக திரைமறைவில் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி கொண்டுதான் இருக்கின்றதாம். இதை தெரிந்துகொண்டுதான் நேற்று வைகோ சிறிது காட்டமாக விஜயகாந்த் தலைமையை ஏற்க முடியாது என்று கூறியிருக்கின்றார். கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும்  மக்கள் நலக்கூட்டணி ஒரு தனிப்பட்ட நபரை இல்லை என்று விஜயகாந்தை மறைமுகமாக தாக்கியுள்ளாராம்.

இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தியே நேரடியாக விஜயகாந்தை போனில் தொடர்பு கொண்டு கூட்டணி குறித்து பேசியதாகவும், இதனால் மீண்டும் திமுக கூட்டணிக்கு விஜயகாந்த் வர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

முதல் ஆளாக வேட்பாளர் பட்டியலை அறிவிக்கும் அதிமுகவும், விஜயகாந்தின் தனித்து போட்டி என்ற அறிவிப்பை கொஞ்சம்கூட நம்பவில்லையாம். தனித்து போட்டியிட்டால் இப்போதைய நிலையில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை என்றும், இது விஜயகாந்துக்கு தெரியாமல் இருக்குமா? என்றும் அதிமுக தரப்பு சந்தேகம் கொண்டுள்ளது. பாஜகவும் கிட்டத்தட்ட விஜயகாந்த் தேவையில்லை என்ற மனநிலைக்கு வந்துவிட்டது.

ஆகமொத்தம் திமுக கூட்டணியில் தேமுதிக இணையவும், அதிமுக கூட்டணியில் பாஜக இணையவும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Leave a Reply