கரூரில் தேமுதிக பிரமுகர் மகன் கடத்தல்

கரூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் தேமுதிக மாவட்ட செயலாளாராக உள்ளார். இவரது மனைவி கொடிமலர். இவர்களுக்கு கிர்பானி, அம்பானி என்ற மகன்கள் உள்ளனர். கிருஷ்ணன் கே.வி.பி நகரை அடுத்த கணேஷ் நகரில் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய கிர்பானி மாயமானதாக தெரிகிறது. அடுக்குமாடி குடியிருப்பு கார்நிறுத்தத்தில் புத்தகப் பை கிடந்துள்ளது. எங்கும் தேடியும் கிடைக்காததால் போலீசாருக்கு புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் கரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாணவன் கடத்தப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply