சொந்த கட்சியிலே வசூல் வேட்டை நடத்தும் தேமுதிக தலைவர்
மற்ற கட்சிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் நேர்காணலின்போது வெற்றி வாய்ப்பு எப்படி, எவ்வளவு செலவு செய்ய வேண்டும், கட்சியின் சார்பில் என்னென்ன உதவி வேண்டும் என்று கேட்கப்படும் நிலையில் தேமுதிகவின் வேட்பாளர் நேர்காணலில் ஒரே ஒரு கேள்விதான் கேட்கப்படுகிறதாம்.
உங்களுக்கு சீட் கிடைத்தால் வெற்றி பெற உங்களால் எவ்வளவு செலவு செய்ய முடியும்? என்ற ஒரே ஒரு கேள்வியுடன் கேப்டன் நிறுத்தி கொள்கிறாராம். டிக்கெட் கிடைக்கும் ஆசையில் ஒவ்வொருவரும் ரூ.20 லட்சம், ரூ.30 லட்சம் என்று கூற உடனே அந்த பணத்தை கட்சியில் கட்டுங்கள் என்று கூறிவிட்டு அவர்களை அனுப்பி விடுகிறாராம் கேப்டன்.
மேலும் டிக்கெட் கிடைக்காதவர்களுக்கு அவர்கள் டெபாசிட் செய்த பணம் திரும்ப அளிக்கப்படும் என தலைமையிடம் இருந்து உறுதிமொழி வெளிவந்தாலும், அந்த பணம் கிடைப்பது சந்தேகமே என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே கூட்டணிக்காக பல கோடிகள் பேரம் பேசிக்கொண்டிருப்பதாக கூறப்படும் நிலையில் சொந்த கட்சியிலேயே கேப்டன் வசூல் செய்வதாக வந்துள்ள செய்தி தேமுதிக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.