மக்கள் நலக்கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல். உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி

மக்கள் நலக்கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல். உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி

vijayakanthகடந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து போட்டியிட முடிவு செய்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், அந்த கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் உளுந்தூர்பேட்டை தொகுதியில் அவர் டெபாசிட் இழந்து படுதோல்வி அடைந்தார். அவரது கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் கிட்டத்தட்ட டெபாசிட் இழந்தனர். மக்கள் நலக்கூட்டணியும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கட்சியின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார் விஜயகாந்த். பெரும்பாலானோர் மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக விலக வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். இதனையடுத்து நேற்று தேமுதிகவின் பொருளாளர் இளங்கோவன், மக்கள் நலக்கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாகவும், வரும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக புத்துயிர் பெரும் என்றும் தங்களுடன் ஒத்த கருத்துக்கள் கொண்ட கட்சிகளை கூட்டணியில் இணைத்துக்கொள்ளவும் தயார் என்றும் இளங்கோவன் மேலும் தெரிவித்துள்ளார். தேமுதிகவை அடுத்து விரைவில் தமாகவும் மக்கள் நலக்கூட்டணியில் இருந்து விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply