ஜெயலலிதாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தால் கவர்னர் மீது நடவடிக்கை. தேமுதிக நோட்டீஸ்

vijayakanthஅதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வரும் 22 அல்லது 23ஆம் தேதி மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்த்து வரும் நிலையில் ஜெயலலிதாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்ககூடாது என தமிழக கவர்னர் ரோசையாவுக்கு தே.மு.தி.க.வைச் சேர்ந்த வக்கீல் ஜி.எஸ். மணி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்வதா? வேண்டாமா? என கர்நாடக அரசு ஆலோசனையில் இருக்கும் நிலையில் ஜெயலலிதா விரைவில் மீண்டும் முதல்வராக விரைவில் பதவியேற்க உள்ளார். இந்நிலையில் டெல்லியில் இருந்து தே.மு.தி.க.வைச் சேர்ந்த வக்கீல் ஜி.எஸ். மணி என்பவர் தமிழக கவர்னர் ரோசைய்யா, தமிழக அரசின் தலைமைச் செயலர் ஆகியோர்களுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அந்த நோட்டீஸில் ஊழல் வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து கர்நாடகா அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்ய 90 நாட்கள் அவகாசம் இருக்கிறது. இந்த மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்து அதன் தீர்ப்பு வரும் வரை ஜெயலலிதாவுக்கு பதவியேற்பு செய்து வைப்பது சட்டவிரோதமாகும். ஜெயலலிதாவுக்கு பதவியேற்பு செய்து வைத்தால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேமுதிகவின் நோட்டீஸ் காரணமாக தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply