உடைகிறது மக்கள் நலக்கூட்டணி. தேமுதிக, தமாக வெளியேறுகிறதா?

உடைகிறது மக்கள் நலக்கூட்டணி. தேமுதிக, தமாக வெளியேறுகிறதா?

makkalதிமுக, அதிமுகவுக்கு நாங்கள்தான் மாற்று என கடந்த தேர்தலின்போது பிரச்சாரம் செய்த மக்கள் நலக்கூட்டணி படுதோல்வி அடைந்தது. இந்த கூட்டணியின் தலைவர்களான திருமாவளவன், உள்பட பலர் தேர்தலில் தோல்வி அடைந்தனர். குறிப்பாக முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்ட விஜயகாந்த் டெபாசிட் இழந்தார்.

முதல் தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கும், திமுகவின் மைனாரிட்டிக்கும் காரணமான தேமுதிக, இரண்டாவது தேர்தலில் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தை அடைந்தது. ஆனால் மூன்றாவது தேர்தலில் அதன் தலைவரே டெபாசிட் இழந்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தேமுதிகவை மக்கள் முழுமையாக நிராகரித்துவிட்டதால் இனி அந்த கட்சி மீண்டும் எழுச்சி பெற வாய்ப்பே இல்லை என்றே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அதேபோல் கடைசி வரை அதிமுகவுக்கு முயற்சி செய்து அந்த கூட்டணியில் இடம் கிடைக்காததால் மக்கள் நலக்கூட்டணிக்கு வந்த தமாகவும் படுதோல்வி அடைந்துள்ளது. எனவே தேமுதிக, தமாக ஆகிய இரண்டு கட்சிகளும் மக்கள் நலக்கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள நான்கு கட்சிகளும் வரும் உள்ளாட்சி தேர்தல் வரை தாக்குப்பிடித்து ஒற்றுமையாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply