தேமுதிக அவசர ஆலோசனை கூட்டம். திமுகவுடன் கூட்டணியா?
தேமுதிகவில் இருந்து சந்திரகுமார் உள்பட 3 எம்.எல்.ஏக்கள் மற்றும் 7 மாவட்ட செயலாளர்களை நேற்று விஜயகாந்த் அதிரடியாக நீக்கியுள்ளார். கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் இந்த அதிரடி நடவடிக்கையை விஜயகாந்த் எடுத்தாலும், இன்னும் பல அதிருப்தி நிர்வாகிகள் இருப்பதால் அனைவரையும் கட்சியில் இருந்து நீக்குவது என்பது இயலாத காரியம் என்பதால் விஜயகாந்த் தற்போது தனது பிடிவாதத்தில் இருந்து இறங்கி வரவுள்ளதாக கூறப்படுகிறது.
இன்று சென்னையில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்த்ஹில் கட்சியின் அவசர ஆலோசனை கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் மக்கள் நலக்கூட்டணியில் இருந்து விலகி திமுக கூட்டணியில் இணைவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் சந்திரகுமார் உள்ளிட்டவர்களை தவிர மீதமுள்ள அதிருப்தியாளர்களை கண்டுபிடிக்கவே விஜயகாந்த் அவசர கூட்டத்தை கூட்டியுள்ளதாகவும், விரைவில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டோரின் இன்னொரு லிஸ்ட் இன்று மாலை வெளிவர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Chennai Today News: DMDK urgetn meeting at Chennai