வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கான திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகியவற்றுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டு உடன்பாடு செய்யப்பட்டது. திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டும் தொகுதிகள் அதிகம் கேட்பதால் இழுபறி நீடிக்கிறது.
திமுக கூட்டணியில் மற்ற அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கிய தொகுதிகள் குறித்த விவரம்:
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் : 1 தொகுதி. தொகுதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
மனிதநேய மக்கள் கட்சி : 1 தொகுதி மயிலாடுதுறை
புதிய தமிழகம் : 1 தொகுதி தென்காசி
மேலும் விடுதலை சிறுத்தைகள் ஐந்து தொகுதிகள் கேட்பதால் தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை. அவர்களுடன் நாளையும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் திமுக 35 இடங்களில் போட்டியிடப்போவதாகவும், காங்கிரஸ், தேமுதிக உள்பட இனி எந்த கட்சியையும் கூட்டணியில் சேர்க்கும் எண்ணம் இல்லை என்றும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.