ரூ.18 கோடி செலவு செய்து பல்பு வாங்கிய திமுக. உற்சாகத்தில் அதிமுக
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில் திமுகவும், அதிமுகவும், மாறி மாறி ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து விளம்பரங்கள் செய்து வருகின்றது.
இந்நிலையில் ரூ.18 கோடி செலவு செய்து அனைத்து நாளிதழ்களின் முதல் பக்கத்தில் திமுக இன்று ஒரு விளம்பரத்தை செய்துள்ளது. அதில், “அம்மாவை ஸ்டிக்கர்ல பாத்துருக்கிறீங்க, பேனர்ல பாத்துருக்கிறீங்க, ஏன் டிவியில கூட பார்த்துருக்கிறீங்க… ஆனா நேர்ல பார்த்துருக்கிறீங்களா?” ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா? என்ற விளம்பரத்தை செய்துள்ளது.
ரூ.18 கோடி செலவு செய்த இந்த விளம்பரத்திற்கு பதிலடியாக ஒரு பைசா செலவில்லாமல் வாட்ஸ் அப்பில் அதிமுக பதிலடி கொடுத்துள்ளது. அதிமுக கொடுத்த வாட்ஸ் அப் விளம்பரத்தில், “கருணாநிதியை நடிகைங்க கல்யாணத்துல பாத்துருப்பீங்க, கலை விழால பாத்துருப்பீங்க, மானாட மயிலாடல பாத்துருப்பீங்க, ஆனா கருணாநிதிய சட்டசபைல பாத்துருக்கிறீங்களா? ஏன் திருவாருர் தொகுதியிலயவாவது பாத்துருக்கிறீங்களா?னு என்று பதிலடி விளம்பரம் கொடுத்துள்ளது.
பத்திரிகைகளைவிட தற்போது பெரும்பாலான இளைஞர்கள் வாட்ஸ் அப்பில் இருப்பதால் இளைஞர்களின் மத்தியில் இந்த விளம்பரம் கவரப்பட்டு மிக வேகமாக பரவி வருகிறது. வெகுசிலரே படிக்கும் பத்திரிகைகளில் வெளிவந்துள்ள விளம்பரம் திமுகவுக்கு கிடைத்த மிகப்பெரிய பல்பு என்றே பலர் கருத்து கூறி வருகின்றனர்.