வரும் நாடாளுமன்ற தேர்தலை திமுக முதல்முறையாக தேசிய கட்சிகளின் கூட்டணியின்றி சிறிய கட்சிகளுடன் மட்டும் கூட்டணி வைத்துக்கொண்டு போட்டியிடுகிறது. கடந்த சில தேர்தல்களில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்து தேர்ந்தலை சந்தித்த திமுக, தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, புதிய தமிழகம் கட்சி , மனிதநேய மக்கள் கட்சி , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய சிறிய கட்சிகளை மட்டும் கூட்டணியில் வைத்துக்கொண்டு தேர்தலை சந்திக்கிறது. கூட்டணியில் சேரும் என்று கடைசி வரை எதிர்பார்க்கப்பட்ட தேமுதிக , கடைசி நேரத்தில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்துக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியலை இன்று திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டர்.
தென்சென்னை- டி.கே.எஸ். இளங்கோவன்
வடசென்னை-கிரி ராஜன்
மத்திய சென்னை- தயாநிதி மாறன்
ஸ்ரீபெரும்புதூர் – ஜெகத் ரட்சகன்
கள்ளக்குறிச்சி- மணிமாறன்
சேலம்- உமாராணி
நாமக்கல்-காந்திசெல்வன்
தருமபுரி- தாமரைச் செல்வன்
திருவண்ணாமலை- சி.என். அண்ணாதுரை
ஆரணி- ஆர்.சிவானந்தம்
விழுப்புரம்- முத்தையன்
திருப்பூர்- செந்தில்நாதன்
நீலகிரி- ஆ.ராசா
கோவை- பழனிக்குமார்.
பொள்ளாச்சி- பொங்கலூர் பழனிச்சாமி
திருச்சி- அன்பழகன்
கரூர்- சின்னச்சாமி
கடலூர்- நந்தகோபால்
தஞ்சாவூர்- டி.ஆர். பாலு
மதுரை- வேலுச்சாமி
தேனி- பொன்.முத்துராமலிங்கம்
விருதுநகர்- ரத்தினவேல்
ராமநாதபுரம்- முகமது ஜபில்
கன்னியாகுமரி-ராஜரத்தினம்
புதுச்சேரி- ராஜிம்
பெரம்பலூர்-பிரபு
நாகப்பட்டினம்-ஏ.கே.எஸ்.விஜயன்
தூத்துக்குடி-ஜெகன்
மேலும் ஆலந்தூர சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளராக ஆர்.எஸ்.பாரதி அறிவிக்கப்பட்டுள்ளார்.