திமுக வேட்பாளர் மூவருமே கோடீஸ்வரர்கள்:பரபரப்பு தகவல்

திமுக வேட்பாளர் மூவருமே கோடீஸ்வரர்கள்:பரபரப்பு தகவல்

ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களாக திருச்சி சிவா, செல்வராஜ் மற்றும் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் அறிவிக்கப்பட்டனர் என்பதும் இவர்கள் மூவரும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் வேட்புமனு தாக்கலில் மூன்று திமுக வேட்பாளர்களின் சொத்து விபரம் குறித்த தகவலை அவர்கள் தங்களுடைய வேட்புமனுவில் தெரிவித்துள்ளனர். அந்த விபரங்களை தற்போது பார்ப்போம்

திருச்சி சிவா: இவரது குடும்பத்திற்கு, 4.81 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளது. இவர் பெயரில், 1.60 கோடி ரூபாய்; மனைவி பெயரில், 37.65 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, அசையும் சொத்துக்கள்; இவர் பெயரில், 2.62 கோடி ரூபாய்; மனைவி பெயரில், 20.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, அசையா சொத்துக்கள் உள்ளன. இவர் பெயரில், 25 லட்சம் ரூபாய் கடன் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

செல்வராஜ்: இவரது பெயரில், 33.32 லட்சம் ரூபாய்; மனைவி பெயரில், 5.55 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துக்கள், மேலும், தன் பெயரில், 68.50 லட்சம் ரூபாய்; மனைவி பெயரில், 83 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, அசையா சொத்துக்கள் என, மொத்தம், 1.90 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து உள்ளது.

என்.ஆர். இளங்கோஎன்: இவரது பெயரில் 1.81 கோடி ரூபாய்; மனைவி பெயரில், 45.54 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துக்களும், இவர் பெயரில், 3.10 கோடி, மனைவி பெயரில், 2.50 கோடி ரூபாய் மதிப்புள்ள, அசையா சொத்து என, மொத்தம், 7.86 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து உள்ளது. மேலும் இவருக்கு 1.51 கோடி ரூபாய், கடன் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

திமுக , ராஜ்யசபா தேர்தல், சொத்துக்கள், தேர்தல்,

Leave a Reply