கருத்துக்கணிப்பு மட்டுமல்ல…இதிலும் திமுகதான் முன்னணி

கருத்துக்கணிப்பு மட்டுமல்ல…இதிலும் திமுகதான் முன்னணி

dmkதினமலர், என்.டி.டி.வி உள்பட ஒருசில நிறுவனங்கள் எடுத்த கருத்துக்கணிப்புகளின்படி திமுகதான் ஆட்சியை பிடிக்கும் என்ற கருத்து நிலவி வருகின்றது. புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு மட்டும் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கூறியுள்ளது. கருத்துக்கணிப்புகள் எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டது, அதில் உள்நோக்கம் ஏதாவது இருக்கின்றதா? என்பது வேறு விஷயம். இந்நிலையில் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் குற்றப் பின்னணியில் உள்ளவர்கள் குறித்த பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. கருத்துக்கணிப்புகளில் முதலிடம் பெற்றுள்ள திமுகதான் இதிலும் முதலிடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றப்பின்னணி வேட்பாளர்கள் குறித்து ஜனநாயக சீர்திருத்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுதர்சன் அவர்கள் கூறும்போது” தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 997 வேட்பாளர்களை ஆய்வு செய்ததில் 283 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளது. இதில், 157 பேர் மீது கடும் குற்ற வழக்குகள் உள்ளது.

மேலும், தி.மு.க. சார்பில் போட்டியிடும் 170 வேட்பாளர்களில் 41 பேர் மீதும், காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் 37 வேட்பாளர்களில் 8 பேர் மீதும் குற்ற வழக்கு உள்ளது. அதேபோல், அ.தி.மு.க.வில் 38 பேர் மீதும், தே.மு.தி.க.வில் 18 பேர் மீதும் குற்ற வழக்குகள் உள்ளது.

தளி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ராமச்சந்திரன் மீது 3 கொலை வழக்குகளும், திருவொற்றியூர் தி.மு.க வேட்பாளர் கே.பி.பி.சாமி மீது ஒரு குற்றவியல் வழக்கும், விளவங்கோடு பா.ம.க வேட்பாளர் அரிகரன் மீது ஒரு குற்ற வழக்கும் உள்ளது.

இதேபோல், இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 997 வேட்பாளர்களில் 553 பேர் கோடீஸ்வர வேட்பாளர்கள்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply